கல்வி

தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தின் முன் , தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் புருசோத்தமன், மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் வேலுச்சாமி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.