கல்விநம்மூர்

பெரியார், அண்ணா பிறந்த நாள்: மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

 தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு ,ஈரோட்டில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இம்மாதம் 12 மற்றும்13 ஆகிய தேதிகளில்பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான இப்பேச்சுப் போட்டி ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் காலையில் 10 மணி  முதலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணி  முதலும்   நடைபெற உள்ளன . இதில், மாவட்டஅளவில் பள்ளி/கல்லூரிப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல்பரிசாக ரூ. 5 ஆயிரம், இரண்டாம்பரிசாக ரூ.3 ஆயிரம் மூன்றாம்பரிசாக ரூ.2ஆயிரம் வழங்கப்படும்.
  மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களில், அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு  செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகையாக ரூ.2ஆயிரம் வீதம் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.