கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் ECE துறையின் IETE சங்கத்தின் தொடக்கவிழாவின் சார்பில் “IETE – STUDENTS FORUM” என்ற தலைப்பில் கருத்தரங்கு கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.இவ்விழாவில் கல்லூரியின் ECE துறையின் முதல்வர் முனைவர். வி. எஸ். அருள்முருகன், அவர்கள் தலைமைதாங்கினர். இதைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினராக முனைவர். டி. மாலதி, தலைவர், IETE-ஈரோடு மையம், கொங்கு பொறியியல் கல்லூரி, ஈரோடு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரையில் எம்படேட் சிஸ்டம்ஸ், டிஜிட்டல் பட செயலாக்கம், தகவல் தொடர்பு, பயோசிக்னல் செயலாக்கம் மற்றும் நெட்வொர்க்கிங் போன்ற பகுதிகளில் சமூகத்திற்குத் தொடர்புடைய திட்டங்களில் மாணவர்கள் ஈடுபடவும், அவர்கள் பல்வேறு போட்டிகள், ஹேக்கத்தான்கள், ஆன்லைன் போட்டிகள், பயிற்சி பட்டறைகள் மற்றும் ஆராய்ச்சி வேலைகளில் பங்கேற்கவும் அறிவுறுத்தினார். இறுதியாக, மாணாக்கர்களுக்கு IETE இன் உறுப்பினர் அட்டையை வழங்கினார். இவ்விழாவில் ECE துறை தலைவர் முனைவர். ஆர். எஸ். கமலக்கண்ணன்அனைவரயும் வரவேற்று பேசினார். இவ்விழாவில் துறை சார்ந்த மாணாக்கர்கள் மற்றும் பேராசிரியர்கள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர். இவ்விழாவின் இறுதியாக ECE துறையின் இரண்டாம் ஆண்டு மாணவி என். காவியஸ்ரீ நன்றியுரை வழங்கினார்.