ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் சிவில், சிஎஸ்இ, இசிஇ மற்றும் எம்டிஇ துறைகளின் சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.இதில்,திருச்சி சர்வதேச விமான நிலைய விமான போக்குவரத்து மேலாண்மை உதவி மேலாளர் கே.ஆர்.தீபக் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில்,வேளாளர் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் எம்.யுவராஜா , கல்லூரி முதல்வர் எம். ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.