ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம் (YRC) செஞ்சுருள் சங்கம் (RRC) மற்றும் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை ஆகியவை இணைந்து ரத்ததான முகாம் நடத்தின. இம்முகாமில் கல்லூரியின் முதல்வர் ஆர்.சங்கரசுப்பிரமணியன், முதலியார் கல்வி நிறுவனத்தின் செயலாளர் மற்றும் தாளாளர் கே.கே.பாலுசாமி, முதலியார் கல்வி நிறுவனத் தலைவர் ஆர்.இராஜமாணிக்கம் , முதலியார் கல்வி நிறுவன பொருளாளர் ஏ.விஜயகுமார், கல்லூரி இயக்குநர் ஆர்.வெங்கடாசலம் ஆகியோர் கலந்து கொண்டு இம்முகாமை. தொடங்கி வைத்தனர். இம்முகாமில் இக் கல்லூரியின் முதல்வர் ஆர்.சங்கரசுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள் ,மாணவ, மாணவியர்களும் ரத்ததானம் அளித்தனர்.