கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் 160 க்கும் மேற்பட்டோருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது, இந்த விழாவில் கடந்த 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பயின்ற 163 மாணவர்களுக்கு இளங்கலை பட்டங்கள் வழங்கப்பட்டது இதில் அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இளங்கலை பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அந்தியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பொன்னுச்சாமி, இன்று பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் மேகங்கள் என்றும், மேகங்கள் பாகுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் மழையினை தருகிறது, அதேபோல மாணவர்களாகிய நீங்கள் அனைவருக்கும் சேவை செய்பவர்களாக இருக்க வேண்டும்