கல்வி

அண்ணா பிறந்தநாளை யொட்டி, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுபோட்டி

அண்ணா பிறந்தநாளை யொட்டி, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இப் போட்டிகளுக்கு ஆசிரியர் கள் யுவராணி, குமரேசன், ஷீலாதேவி ஆகியோர் நடு வர்களாக செயல்பட்டனர். ஈரோடு அரசு பெண் கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப் போட்டியில், கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி 8ம் வகுப்பு மாணவி பிரணிதா முதலிடமும், வலையபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி தமிழ்கனி 2ம் இடமும், ஓடத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி 6ம்வகுப்பு மாணவி 3ம் பரி சும் பெற்றனர்.இவர்களுக்கு முறையே ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, கருங்கல்பா ளையம் நகரவை மகளிர் மேல் நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி அக்ஷய சக்தி, குமலன் குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவர் நிதின் ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர்.இவர்களுக்கு முறையே தலா ரூ.2,000 பரிசு வழங்கப் பட்டது.