நம்மூர்

தெருநாய்கள், வலைவீசி பிடிப்பு

பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, ஈரோடு மாநகராட்சி 44வது வார்டுக்கு உட்பட்ட தாலுகா அலுவலக வளாகம், நடுவீதி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்த 20க்கும் மேற்பட்ட தெருநாய்களை மாநகராட்சி பணியாளர்கள் வலைவீசி பிடித்தனர். பின்னர் அந்த நாய்களை சோலாரில் அமைந்துள்ள நாய்கள் கருத்தடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.