ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி ரோட்டில், ஈரோடு மாநகராட்சி சார்பில், ரூ.22 லட்சம் மதிப்பில் மாநகர பொது சுகாதார ஆய்வகம் கட்டப்பட்டது. இக்கட்டிடத்தை கடந்த மார்ச் 13ம் தேதி காணொளி மூலம் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
ஆனால், ஏறத்தாழ 6 மாதங்களாகியும் இதுவரை இந்த ஆய்வகம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் குறிப்பாக கர்ப்பிணிகள், முதியோர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பரிசோதனை செய்துக்கொள்ள, தனியார் ஆய்வகத்துக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது என்று அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, இப்பொது சுகாதார ஆய்வகத்தை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
எப்போது பயன்பாட்டுக்கு வரும்இந்த பொது சுகாதார ஆய்வகம் ?
Shares: