நாடு முழுவதும் கட்டணமின்றி ஆன்லைனில் ஆதார் விபரங்களை புதுப்பிக்க இம்மாதம் ( செப்டம்பர் ) 14- ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் பதிவு விவரங்களை ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை தங்களின் பெயர் திருத்தம், முகவரி மற்றும் மொபைல் போன் எண் மாற்றம் போன்ற சமீபத்திய தகவல் விவரங்களை உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் வழியாக புதுப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஆதார் பதிவு விவரங்களை கட்டணமின்றி புதுப்பிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை இம்மாதம் 14ம் தேதி வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அப்டேட் :14ம் தேதி வரை அவகாசம்
Shares: