நம்மூர்

சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்திஅதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தில் சொத்துவரி , மின் கட்டணம், பஸ்கட்டணம், ஆவின் பொருட்கள் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை ஆகியவற்றை உயர்த்தியதாக தமிழக அரசை கண்டித்தும், சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று (அக்.8) அ.தி.மு.க. சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதன்படி, ஈரோட்டில் அதிமுக கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் ஈரோடு பஸ் நிலையத்தின் முன் பகுதியில் இருந்து பன்னீர் செல்வம் பூங்கா வரை மனித சங்கிலி போராட்டம் , தமிழக முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.வி.ராமலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ.கே.எஸ்.தென்னரசு,ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் , ஈரோடு மாநகராட்சியின் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, கட்சியின் பகுதிச் செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீஷ், அதிமுக பிரமுகர் முருகானந்தம், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.