நம்மூர்

சென்னிமலை அனைத்து வணிகர் சங்கம் சார்பில்அமைச்சரிடம் கோரிக்கை மனு

சென்னிமலை அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் ஏ.ரமேஷ், செயலாளர் எம்.ஏ.அன்பழகன் பொருளாளர் எஸ்.மணிவேல் மற்றும் அமைப்பு செயலாளர் எம்.குமரேசன் ஆகியோர் இன்று (ஜன.3) சென்னிமலைக்கு வருகை தந்த தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், சென்னிமலை பேரூராட்சியில் தொழில்வரி மற்றும் தொழில் உரிமை கட்டணம் குறித்து மறு ஆலோசனை செய்ய வேண்டும் எனவும் இதற்காக சென்னிமலை பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்த ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுதி அளித்துள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.