நம்மூர்

ஈரோட்டில் மினி மராத்தான் போட்டி

ஈரோடு மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் மினிமாராத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா கலந்து கொண்டு மினி மாரத்தான் போட்டியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
முன்னதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் எய்ட்ஸ் தொடர்பாக விழிப்புணர்வு பெறும் வகையில் பயணிகள் ஆட்டோவில் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சியர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய மாரத்தான் போட்டி திண்டல் வரை சென்று நிறைவடைந்தது.
இதில் கல்லூரி மாணவ மாணவியர் கூட 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.