ஈரோடு கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் சாலையில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன.3) காலை முதல் பாதாள சாக்கடையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியானது நடைபெற்றது . இதில், வட மாநில தொழிலாளர்கள் சிலரை கொண்டு, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் குறிப்பாக முகத்திற்கு மாஸ்க் , கால்களுக்கு ஷூ போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், பாதாள சாக்கடை கழிவு நீரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது . இவ்வாறு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இத்தகைய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு , சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்