நம்மூர்

மாநகராட்சியில், ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வட கிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் , ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் சரவணக்குமார், பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.