ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது . இதன் காரணமாக ஈரோட்டில் கனிராவுத்தர்குளம், முத்தம்பாளையம் குளம், பெரிய சடையம்பாளையம் மழைநீர் சேகரிப்பு குட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் உள்ள அணைக்கட்டில் உபரி நீர் நிரம்பி அருவி போன்று கொட்டுகிறது.