சென்னிமலையில் உள்ள குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் சர்வதேச ஊழல் ஒழிப்பு நாள், தேசியகவி பாரதியார் பிறந்தநாள், தேசிய நுகர்வோர் தினம், மனித உரிமைகள் தினம், தேசிய விவசாயிகள் தினம் மற்றும் நற் சேவையாளர்களுக்கு விருது வழங்குதல் என அறுபெரு விழா -2024 என்ற நிகழ்ச்சி சென்னிமலையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு சென்னிமலை குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்ற தலைவர் ஏ.என்.உத்தமராஜன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் பெ.திருவள்ளுவர் வரவேற்று பேசினார். இவ்விழாவில் , பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் த.ரவிக்குமார், பெருந்துறை மின்வாரிய தலைமை பொறியாளர் டி.செந்தில்குமார் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்க தலைவர் (பெருந்துறை) பல்லவி பரமசிவம் ஆகியோருக்கு நற்சேவையாளர்கள் விருது வழங்கப்பட்டது.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஏ.பாரி கலந்து கொண்டு விருது பெற்றவர்களை பாராட்டியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகளில் முதல் மற்றும் 2-ம், 3-ம் இடம் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் பேசினார். இவ்விழாவில் சென்னிமலை குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மன்றத்தை சேர்ந்த செ.கந்தசாமி, கு.சுந்தரராஜன், கொ.சதாசிவம் உள்பட பலர் பேசினார்கள். முடிவில் மன்ற பொருளாளர் பெ.லீலாவதி நன்றி கூறினார்.
நற் சேவையாளர்களுக்குவிருது வழங்கும் விழா
Shares: