மத்திய அரசின் நிதியுதவியுடன் செயலபடுத்தப்பட்டு வரும் திட்டங்கள், மாவட்டவளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஈரோடு எம்.பி.,பிரகாஷ் தலைமையில், ஈரோடு கலெக்டர்அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், 44திட்டங்கள் சார்ந்த பணி ஆய்வுக்கு எடுத்துகொள்ளப்பட்டது. வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்குகொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் ராஜகோபால்சுன்கரா, எம்.பி.,க்கள் சுப்பராயன், செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம்,சரஸ்வதி, மாநகராட்சி கமிஷனர் மணீஷ்,எஸ்.பி., ஜவகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.