நம்மூர்

பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்களுக்கு நியமன உத்தரவு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக நியமிக்கப்பட்ட பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்களுக்கு நியமன உத்தரவை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். ஈரோடு திண்டலில் வேலாயுத சுவாமி கோயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா, அந்தியூர் தொகுதி எம்.எல்.ஏ., வெங்கடாசலம், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ் , ஈரோடு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்