நம்மூர்

ஈரோட்டில் பெருபள்ளம் ஓடையில் மதுபோதையில் தவறி விழுந்த நபரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

ஈரோட்டில் காந்திஜி சாலையில் குறுக்கே செல்லும் பெருபள்ளம் ஓடையில் பாலத்தின் கீழே குப்பைகளை அவ்வப்போது பொதுமக்கள் கொட்டிச்செல்வதால் ஓடையில் குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் வகையில் பாலத்தில் மேல்பகுதியில் ஓடையின் இருபுறமும் 5அடி உயரத்திற்கு மேலாக கம்பி வேலி மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டது.இந்நிலையில் ஓடையின் அடிப்பகுதியில் உள்ள புதரில் இருந்து அடையாளம் தெரியாத நபரின் அலறல் சத்தம் கேட்டது.இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கம்பி வேலியை துண்டித்து புதரின் உள்ளே உயிருக்கு போராடி கொண்டிருந்த நபரை பாதுகாப்பாக மீட்டு பாலத்தின் மேல் பகுதியில் கொண்டு வந்தனர்.இதன் பின்னர் ஈரோடு நகர போலீசார் விசாரணை நடத்தியதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பதும் மதுபோதையில் தவறி விழுந்தது தெரியவந்தது.இதையடுத்து சிறிய காயத்துடன் இருந்த அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய