நம்மூர்

தனியார் ஜவுளி கடையில் சலுகை விலையில் சட்டை பேண்ட் இளைஞர்கள் கடை முன் குவிந்ததால் தள்ளுமுள்ளு .

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட காந்திஜி சாலையில் உள்ள தனியார் துணிக்கடை ஒன்றில் சலுகை விலையில் சட்டை பேண்ட் விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது இதனைத் தொடர்ந்து இன்று அந்த அறிவிப்பின்படி டி ஷர்ட் 50 ரூபாய்க்கும் ஷர்ட் 100 ரூபாய்க்கும் பேன்ட் 250 ரூபாய்க்கும் லேடிஸ் டாப்ஸ் 120 ரூபாய்க்கும் சலுகை விலையில் ஜவுளிகள் விற்பனையானது நடைபெற்றது இந்நிலையில் சலுகை விலையில் விற்கப்படுவதால் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடை முன் குவிந்தனர் மேலும் கடைக்குள் போட்டி போட்டுக் கொண்டு நுழைந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது கட்டுக்கடங்காத கூட்டம் ஜவுளிக்கடை முன்பு குவிந்ததால் அங்கு பாதுகாப்பு பணிக்காகவும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போலீசார் குவிக்கப்பட்டுள்ளன மேலும் ஜவுளிக்கடை அமைந்திருக்கக் கூடிய பகுதி பிரதான சாலையாக இருப்பதால் வாகனங்களை சாலையில் நிறுத்தப்பட்டதால் அங்கு பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டன சலுகை விலை விற்பனையானது இன்னும் ஒரு வாரம் காலம் கடைபிடிக்கப்படும் என அறிவித்தும் இளைஞர்கள் கடை முன் குவிந்ததால் அங்கு பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.