ஆன்மீகம்

ஈரோட்டில், கல்லறை திருநாள்

கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதியை கல்லறை திருநாளாக கடைபிடித்து வருகின்றனர். இதன்படி, ஈரோடு சத்தி சாலை சந்திப்பில் உள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாளினையொட்டி , (நவ.2) கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் கல்லறைக்கு வந்து, கல்லறைகளை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்து, மலர் வளையம் வைத்து, மெழுகு வர்த்தி ஏந்தி, ஜெப புத்தகத்தை படித்து, முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர். இதைத்தொடர்ந்து மாலை சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது