ஆந்திர மாநிலம் திருப்பதி கோவிலில் வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கின் கொழுப்புகள் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வரும் நிலையில், இந்து முன்னணி சார்பில் இன்று கோவில்களில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது, திருப்பதி லட்டுகளில் விங்கின் கொழுப்புகள் கலந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும், கோவிலின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தேங்காங்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்