Uncategorized

ஈரோட்டில் கன மழை :சாலைகளில்பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. , ஈரோடு மாநகரில் மாலை 4 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து இடி-மின்னலுடன் சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக ஈரோடு மாநகரில் ஆர்கேவி சாலை, கொங்கலம்மன் கோவில் வீதி, முனிசிபல் காலனி, கருங்கல்பாளையம், காவேரி சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை, காந்திஜி சாலை ,பெரும்பள்ளம் ஓடை பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீரானது, கழிவு நீர் ஓடைகளில் நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடியது. இதனால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும், வெண்டிபாளையம், கே.கே.நகர் ரயில்வே நுழைவு பாலங்களிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் மாற்று வழியில் சுற்றி சென்றனர். இந்நிலையில், ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள பெரியார் நகர் ஆர்ச் பகுதியில் கனமழையால் பாதாள சாக்கடை ‘மேன் ஹோல்’ சேதமடைந்து, மழை நீரும், கழிவு நீரும் குபுகுபுவென வெளியேறியது. இதனால், பொது மக்கள் அப்பகுதி வழியாக நடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.