ஆன்மீகம்

மாகாளியம்மன் கோயில்களில்பொங்கல் விழா

சென்னிமலை அருகே சில்லாங்காட்டுவலசில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் கடந்த மாதம் 17-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்கியது. பின்னர் 25-ந் தேதி இரவு கோயிலின் முன்பு கும்பம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று முதல் தினமும் காலை, மாலையில் மாகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு விநாயகருக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், இன்று (ஜன.1) அதிகாலை மாவிளக்கு எடுத்தல் மற்றும் அதனைத்தொடர்ந்து பொங்கல் விழாவும் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சென்னிமலை அருகே திப்பம்பாளையத்தில் உள்ள மாகாளியம்மன் கோயிலில் கடந்த மாதம் 17-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. 25-ந் தேதி இரவு கோயிலில் கும்பம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு விநாயகருக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று அதிகாலை மாவிளக்கு எடுத்தல் மற்றும் அதனைத்தொடர்ந்து பொங்கல் விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.