ஈரோடு திண்டலில் உள்ள வேலாயுத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா விமர்சையாக கொண்டாடப்படும். இதன்படி, நடப்பாண்டுக்கான கந்தசஷ்டி விழா (நவ.2) காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின்னர் வள்ளி மற்றும் தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கணபதி ஹோமமும், யாகபூஜையும் நடந்தன. இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர். அப்போது, பக்தர்கள் தங்களது கையில் காப்பு கயிறு கட்டி கந்தசஷ்டி விரதத்தை தொடங்கினர். கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சண்முகார்ச்சனை நடைபெற்றது