நம்மூர்

ஓடும் காரில் திடீர் தீ :ஈரோடு அருகே பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் குருவாயூர் அப்பர் நகரை சேர்ந்தவர் சரவணன் (45). அதே பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (63). இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்கள் மூன்று பேரும் இன்று காலை காரில் ஈரோடு அசோகபுரத்தில் உள்ள பனியன் மார்க்கெட்டுக்கு துணி வாங்குவதற்காக திருப்பூரிலிருந்து ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை , சரவணன் ஓட்டி வந்தார். ஈரோடு நசியனூர் ரோடு, வில்லரசம்பட்டி நால் ரோடு அருகே கார் இன்று காலை 6 மணியளவில் வந்த போது காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை கவனித்த சரவணன் காரை உடனடியாக சாலையோரம் நிறுத்தினார். காரில் இருந்து சரவணன் குணசேகரன் விஜயலட்சுமி உடனடியாக இறங்கினர். அவர்கள் இறங்கிய சில நிமிடங்களிலேயே கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. காரில் இருந்து மூன்று பேரும் உடனடியாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். இவ்விபத்து குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்