நம்மூர்

நம்ம ஈரோடை selfie point – ஐ மாண்புமிகு மேயர் அவர்கள் துவக்கி வைத்தார்.

ஈரோடு மாநகராட்சியின் மைய அலுவலக முன்பு, “நம்ம ஈரோடை” செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செல்பி பாயிண்ட் ட்ரெண்டாகி வருகின்றது. குறிப்பாக, சென்னை, கோவை நாமக்கல், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களில் பிரம்மாண்டமான செல்பி பாயிண்ட்டுகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் செல்பி எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் சுற்றுலா தளங்கள் காணப்பட்டாலும் கூட, இதுவரை ஈரோட்டுக்கு என்று ஒரு செல்பி பாயிண்ட் இல்லை. இந்தக் குறையை போக்கும் வகையில், ஈரோடு மாநகராட்சி சார்பில், மாநகராட்சி மைய அலுவலகத்தின் முன்புறம், செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டது. இதனை மாநகராட்சி மேயர் நாகரத்தினம் நேற்றுமுன் தினம் தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், 1வது மண்டல தலைவர் பழனிசாமி, தி.மு.க மாநகர செயலாளர் சுப்பிரமணியம், தலைமை பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.