ஈரோட்டில் கொங்கலம்மன் கோயிலில் 36ம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று (செப்.3) தொடங்கியது. இதனையொட்டி, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (5ம் தேதி), பாலதிரிபுசுந்தரி அலங்காரத்திலும் , 6ம் தேதி கற்பகரக்ஷாம்பிகை அலங்காரத்திலும், 7ம் தேதி வராஹி அம்மன் அலங்காரத்திலும் 8ம் தேதி லலிதாம்பிகை அலங்காரத்திலும், 9ம் தேதி மகாலட்சுமி அலங்காரத்திலும் 10ம் தேதி காயத்ரி தேவி அலங்காரத்திலும், 11ம் தேதி வித்ய சரஸ்வதி தேவி அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலிக்கிறார்.நவராத்திரியின் நிறைவு நாளான 12ம் தேதி நவ மகா சண்டிஹோமம் நடைபெறவுள்ளது