நம்மூர்

கல்யாண் ஸ்டோர்ஸ்கடையில் தீ

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள காளிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் மணி (50). இவர் அவல்பூந்துறை அருகே உள்ள சோளிபாளையத்தில் கல்யாண் ஸ்டோர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் இக்கடையில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்ததும் மொடக்குறிச்சி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடையில் இருந்த 4 சிலிண்டர்கள் வெடித்தால் மேலும் தீ அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, ஈரோட்டில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் தீ மற்ற இடங்களில் பரவாமல் இருப்பதற்காக தீ தடுப்பு பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அந்த கல்யாண் ஸ்டோரில் வைக்கப்பட்டிருந்த மைக் செட், பந்தல், சாமியான பந்தல், சமையல் பாத்திரங்கள், டேபிள், சேர், இரண்டு டெம்போ, சிலிண்டர் ஆகியவைகள் தீயில் எரிந்தன. இந்த தீவிபத்து குறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.