நம்மூர்மாநிலம்

வீட்டு வசதி வாரியம்:கிரயப் பத்திரம் பெறாதோர் கவனத்திற்கு…

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் ஈரோடு வீட்டுவசதிப்பிரிவு செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- ஈரோடு வீட்டு வசதி பிரிவிற்கு உட்பட்ட முத்தம்பாளையம் பகுதி 1, 2, 4, 5, 5ஏ பெருந்துறை மற்றும் நசியனூர் சாலை திட்டங்களில் மனைகள் ஒதுக்கீடு பெற்று தவணைக்காலம் முடிவுற்ற பின் வட்டி சலுகை அறிவித்தும், நிலுவை விளக்க அறிக்கைகள் பலமுறை அனுப்பியும், முழுத் தொகையும் செலுத்தி கிரயப்பத்திரம் பெற்றுக்கொள்ளாத ஒதுக்கீடுதாரர்கள் உடனடியாக தங்கள் வசம் உள்ள மனை ஒதுக்கீடு ஆணை, புல வரைபட நகல், பணம் செலுத்திய அசல் ரசீதுகளுடன் இவ்வலுவலகத்திற்கு வேலை நாட்களில் நேரில் வருகை தந்து கணக்கை நேர் செய்து வாரிய விதிமுறைகளின்படி கிரயப்பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் என்று தவறும் பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மனை ஒதுக்கீடு ரத்து செய்யப்படும். இவ்வாறு அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.