நம்மூர்

ஈரோடு மாவட்டத்தில்கால்நடை கணக்கெடுப்பு பணி

ஈரோடு மாவட்டத்தில் தற்போது முதல் டிசம்பர் மாதம் வரை கால்நடை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இக்கணக்கெடுப்பு பணியில் கால்நடை மருத்துவ பட்டதாரிகள், கால்நடை ஆய்வாளர்கள், பணி ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர்கள், இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு முடித்தோர், தனியார் செயல்முறை கருவூட்டாளர்கள் ஆகியோர் ஈடுபடுகின்றனர். ஒரு கணக்கெடுப்பாளருக்கு கிராம பகுதியில் 4 ஆயிரம் குடியிருப்புகள், நகர பகுதியில் 5 ஆயிரம் குடியிருப்புகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு 246 கணக்கெடுப்பாளர்கள், 55 மேற்பார்வையாளர்கள், ஒரு கூர்ந்தாய்வாளர் ஆகியோர் கணக்கெடுப்பு பணி செய்கின்றனர். பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு, நாய், கோழி, பன்றி, குதிரை இதர கால்நடைகள் விவரம் கணக்கெடுக்கப்படும். இதன் மூலம் கால்நடைகளுக்கான மருந்துகள், தடுப்பூசிகள் வழங்கவும், கால்நடை பெருக்கம், கால்நடை தீவன உற்பத்தி குறித்து அரசு திட்டமிடும். கணக்கெடுப்பில் கால்நடைகளுடன் பண்ணை உபகரணங்களின் விபரமும் சேகரிக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்