நம்மூர்

பெலிகிரி குட்டையில் மதகின்பழுது நீக்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திகினாரை ஊராட்சியில் உள்ள எரகனள்ளி கிராமத்தில் பெலிகிரி குட்டை உள்ளது. கடந்த சில மாதங்களாக இக்குட்டையில் நீர் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மழை பெய்துள்ளதால் குட்டை நிரம்ப தொடங்கியுள்ளது. குட்டையில் உள்ள மதகு பழுதான நிலையில் உள்ளது. இதனால் குட்டை நிரம்பும் பட்சத்தில் மதகு வழியாக நீர் கசிந்து அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் நீர் புகுந்து விவசாய பயிர்கள் பாதிக்க கூடிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மழை பெய்து குட்டை நிரம்பும் முன்பு பழுதான நிலையில் உள்ள மதகை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.