நத்தம் நிலங்களுக்கு ஆன்லைன் மூலம் பட்டா மற்றும் சிட்டா சான்றிதழ் பெறுவதில் உள்ள இடையூறுகளை நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ,ஈரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்டத் தலைவர் திருசெல்வம், மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன்,விவசாய பிரிவு மாவட்ட தலைவர் பெரியசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை முன்னாள் மாநில துணைத்தலைவர் ஜவஹர் அலி, மண்டலத் தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.