ஈரோடு மாநகராட்சி 36வது வார்டு கவுன்சிலரும், திமுக விவசாய அணியின் மாநகர துணை செயலாளருமான செந்தில்குமார், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கும், அவரது வார்டில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது வழக்கம். இதன்படி, நடப்பாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர் உட்பட பல்வேறு பிரிவு ஊழியர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு, பட்டாசு பாக்ஸ், புத்தாடைகளை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கவுன்சிலர் செந்தில்குமார் தலைமை தாங்கி, அவரது சொந்த நிதியில் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணியாளர்கள், வாகன ஓட்டுநர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், மின் வாரிய ஊழியர்கள், நெடுஞ்சாலைத்துறையினர், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு இனிப்பு, பட்டாசு, புத்தாடைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செந்தில்குமாரின் தந்தையான பழனியப்பா நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்
தூய்மை பணியாளர்கள்உள்ளிட்ட 300 பேருக்குபட்டாசு, புத்தாடைகள்வழங்கிய மாநகராட்சி கவுன்சிலர்
Shares: