ஈரோடு மாநகராட்சி சார்பில், ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று (நவ.12) ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பன்னீர்செல்வம் பூங்கா சாலை, மணிக்கூண்டு சாலை,சக்தி சாலை வரை பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கும் இடங்களில் இருக்கும் தள்ளுவண்டிகள் கடையின் போர்டுகள் தகர சீட்டுகள் போன்ற பொருட்கள் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அகற்றப்படுகின்றன. இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ” ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென மாநகராட்சி சார்பில் பல முறை சொல்லியிருந்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் காலம் தாழ்த்தி வந்ததால் இத்தகைய ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக” தெரிவித்துள்ளனர்.
ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்
Shares: