நம்மூர்

காதில் பூ வைத்து நூதன ஆர்ப்பாட்டம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நியமனத்தேர்வு அரசாணை 149 -ஐ ரத்து செய்து விட்டு, தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தபடி, 177 -ஐ நடைமுறைப்படுத்தக் கோரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அமைப்பின் சார்பில் தமிழகத்தில் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் காளை மாடு சிலை அருகில் ஈரோடு,கோவை, திருப்பூர், சேலம்,தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 300 -க்கும் மேற்பட்டோர் காதுகளில் பூ வைத்து நூதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.