ஈரோடு மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் துடுப்பதியில் உள்ள ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் ஐம்பெரும் விழா நடைபெற்றது.
விழாவில், ஈரோடு மாவட்ட செங்குந்தர் மகாஜன சங்க மாவட்ட தலைவர் என்.நந்தகோபால் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் சோழா எம்.ஆசைதம்பி முன்னிலை வகித்துப் பேசினார். சமுதாய சான்றோர்களுக்கு அவிநாசி ஆதீனம் காமாட்சி தாச சுவாமிகள் , வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி உரையாற்றினார். தொடர்ந்து நடைபெற்ற மாவட்ட சங்கத்தின் 41 ஆம் ஆண்டு விழாவில் பழனி மற்றும் சேலம் மெய்தவப் பொற்சபை நிறுவனர் மெய்தவம் அடிகள் 17ஆம் நூற்றாண்டில் ஈரோட்டை கோட்டை கட்டி ஆண்ட செங்குந்தர் குல மன்னர் சந்திரமதி முதலியார் திருவுருவப் படத்தை வெளியிட்டு உரையாற்றினார். இவ்விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
சுதந்திரப் போராட்ட தியாகி குமரனுக்கு அரசு சார்பாக நினைவு அரங்கம் என்பதை மாற்றி சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசை கேட்டுக் கொள்வது; தமிழகம் முழுவதும் உள்ள நெசவாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கிய பாவடி நிலத்தை நெசவாளர்களுக்கே பாத்தியப் படுத்திப் பட்டா வழங்க அரசு ஆணை வெளியிடக் கோருவது; ஈரோட்டை ஆண்ட சந்திரமதி முதலியார் திருவுருவ சிலையை நகரின் முக்கிய பகுதியில் நிறுவ தமிழக அரசை கேட்டுக் கொள்வது; செங்குந்தர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க கோருவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தியாகி குமரனுக்கு சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை
Shares: