கல்வி

ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிகவியல் மற்றும் ஆராய்ச்சி துறையின் சார்பாக ‘வணிக கண்டுபிடிப்பு மற்றும் நிலையான வளர்ச்சியில் வளர்ந்து வரும் போக்குகள் ‘ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் , இக்கல்லூரியின் செயலாளரும், பவானி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே. சி. கருப்பண்ணன் தலைமையுரையாற்றினார். இக்கல்லூரியின் இணைச் செயலாளர் ஜி .பி. கெட்டிமுத்து, கல்லூரியின் செயல் அதிகாரி க. கௌதம், கல்லூரியின் முதல்வர் அ .மோகனசுந்தரம் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருச்செங்கோடு கே. எஸ். ஆர்.கலை அறிவியல் மகளிர் கல்லூரி இயக்குனர் டி.குமரேசன், உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் ஜே .டி .ஜி கல்லூரி உதவிப்பேராசிரியர் ஆசிஸ் மிஸ்ரா, சென்னையில் உள்ள குருஞானக்கல்லூரி டீன் காயத்ரி ஹரிகுமார் மற்றும் திருச்சியில் உள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி இணைப்பேராசிரியர் சி. பரமசிவன், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்