தென்னக காசி பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கருவறைக்கு சென்று பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டைசுற்றிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற தென்னக காசி பைரவர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் நுழைவு வாசலில் உலகிலேயே மிக உயரமான 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பைரவர் சிலை கொண்டது. இந்த ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் மூலவராக உள்ள சொர்ணலிங்க பைரவருக்கு பக்தர்களே பூஜைகள் செய்யலாம் என்பது தனிச்சிறப்பு. இந்நிலையில் நேற்று தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிஜி தலைமையில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலையில் முதற்கால பாலபிஷேக பூஜையும், மாலையில் இரண்டாம் கால பாலபிஷேகம் நடைபெற்றது. இதில் ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து காலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் கருவறைக்கு சென்று பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். ஆன்மீக குரு ஸ்ரீ விஜய் சுவாமிகள் தலைமையில் பைரவருக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளால் பைரவருக்கும், ஸ்வர்ணலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்
தென்னக காசி காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விஜய் சுவாமிஜி தலைமையில் பாலாபிஷேகம் நடைபெற்றது.
Shares: