ஈரோடு மாநகராட்சி கூட்டரங்கில் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் மனிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு மாநகராட்சி கூட்டம் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இக்கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் தங்களது வார்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து விரிவாக பேசினர்