ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் , புனேவில் இருந்து கோவை நோக்கி பேட்டரி லோடுகளை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பெத்தம்பாளையம் பிரிவு பகுதியில் வந்துக் கொண்டிருந்தபோது லாரியின் டீசல் டேங்க் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் லாரி தீப்பற்றி எரிய தொடங்கியது. லாரியிலிருந்து கரும்புகை வெளியேறி தீப்பற்றியதை பார்த்த ஓட்டுநர் உடனடியாக லாரியை , நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி விட்டுள்ளார். இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை தீயணைப்புத் துறையினர் , போராடி தீயை அணைத்தனர். தீயில் லாரி மற்றும் பேட்டரிகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இவ்விபத்து தொடர்பாக பெருந்துறை போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.