நம்மூர்

ஈரோட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா துவக்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ஈரோடு காளைமாட்டு சிலை அருகே அமைந்துள்ள வசந்தம் கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். பின்னர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நெசவாளர்களால் புதிய வடிவமைப்புகளுடன் உற்பத்தி செய்யப்பட்டப்பட்டு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ள , பட்டு மற்றும் பருத்தி சேலைகள், ஆர்கானிக் சேலைகள், ரெடிமேட் சட்டைகள், மகளிருக்கான சுடிதார் இரகங்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு ரக துணிகளை பார்வையிட்டார். தீபாவளி பண்டிகையையொட்டி துவங்கப்பட்டுள்ள இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில், வசந்தம் கோ ஆப்டெக்ஸிற்கு 1.40 கோடி ரூபாயும், கோபிசெட்டிபாளையம் கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்திற்கு 38 லட்சமும் என மொத்தம் 1.78 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இங்கு விற்பனை செய்யப்படும் கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்குப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், கைத்தறி உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வன், கோ-ஆப்டெக்ஸின் மண்டல மேலாளர் அம்சவேணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்