.ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், மினி பஸ்கள் விதிகளை மீறி இயக்கப்படுகிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார். இதன்பேரில், ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் பதுவை நாதன் தலைமையில் நேற்று ஈரோடு பஸ் ஸ்டாண்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பஸ்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா?, அனுமதி பெறப்பட்ட வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறதா?, கூடுதல் பயணக்கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. இதில், முறையான வழித்தட விவரம் மற்றும் கட்டண விவரம் இல்லாது, சீட் பெல்ட் அணியாமல் பஸ்களை இயக்கியதாக 10 பஸ்களின் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. 2 பஸ்களில் இருந்து ஏர் ஹாரன் அகற்றப்பட்டது. இந்த ஆய்வின்போது, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுரேந்திரகுமார், சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.