நம்மூர்

கனமழையால் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் செல்லும் வழியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. கடந்த 20 நாட்களுக்கு முன்பு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இத கனமழை காரணமாக, கிடுகிடுவென நீர்மட்டம் உயர்ந்து 32 அடியை தொட்டது. இந்நிலையில், நேற்று இரவு பர்கூர் மலையின் மேற்கு மலைப் பகுதியான தாளக்கரை சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக இன்று அதிகாலை அணையின் முழு கொள்ளளவான 33 அடியை எட்டியது. கனமழையால் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து, வினாடிக்கு 67 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து அந்தியூர் மற்றும் கெட்டிசமுத்திரம் ஏரிக்கு 67 வினாடிக்கு கன அடி தண்ணீர் செல்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் வருவாய் துறை சார்பில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையின் நிலவரம் குறித்து அந்தியூர் தாசில்தார் கவியரசு உள்ளிட்ட வருவாய் துறையினர் நேரில் ஆய்வு செய்தனர்.