மஹாளய அமாவாசையை முன்னிட்டு இன்று, பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கானோர் தங்களின் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இவர்கள், ஈரோடு மட்டுமின்றி நாமக்கல்,கோவை, சேலம்,தர்மபுரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்தனர். இதை தொடர்ந்து, முக்கூடலில் புனித நீராடி விட்டு, பிரசித்தி பெற்ற பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில், இதையொட்டி, காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதுறை காவிரி ஆற்றில் தடுப்புகள் அமைத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.