தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர்
த.வெள்ளையனின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னிமலை அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் நேற்று சென்னிமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு (வியாழக்கிழமை) ஒரு நாள் கடை அடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னிமலை பஸ் நிலையம், 4 ராஜ வீதிகள், ஊத்துக்குளி ரோடு, குமராபுரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மளிகை கடைகள், இரும்பு கடைகள், செல்போன் கடைகள், துணிக்கடைகள், பாத்திர கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
ஒரு சில டீ கடைகள் மற்றும் ஓட்டல் கடைகள் மற்றும் திறக்கப்பட்டிருந்தது. மருந்து கடைகள், பால் கடைகள் ஆகியவை வழக்கம் போல் செயல்பட்டன.
மாலையில் சென்னிமலை குமரன் சதுக்கத்திலிருந்து சென்னிமலை அனைத்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட மௌன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர்த.வெள்ளையனின் மறைவிற்கு அஞ்சலி
Shares: