நம்மூர்

கேர்மாளம் அருகே 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக கேர்மாளம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசு போக்குவரத்துக் கழக பஸ் ஒன்றும், கேர்மாளம் செக்போஸ்ட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்துக் கொண்டிருந்த மற்றொரு அரசு போக்குவரத்துக் கழக பஸ்சும் , கேர்மாளம் அருகே உள்ள புதுத்தொட்டி அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. இவ்விபத்தில் அதிருஷ்டவசமாக இரண்டு பஸ்களின் ஓட்டுநர்களுக்கோ, பயணிகளுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை.