மொடக்குறிச்சி வட்டம், கண்டிக்காட்டுவலசு ஊராட்சி, சின்னமனியம்பாளையம் முதல் பத்ரகாளியம்மன் கோவில் வரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2024-25) மூலம் ரூபாய் 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தார் சாலை அமைக்க பூமி பூஜை இன்று (27.09.2024) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அம்மா அவர்கள் கலந்து கொண்டு தார் சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கணபதி, கண்டிக்காட்டுவலசு ஊராட்சி மன்ற தலைவர் மகாசாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் பரமசிவம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.