ஈரோட்டில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் , ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் -2025- யை ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான ராஜ கோபால் சுன்கரா , அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (ஜன.6) வெளியிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 55 ஆயிரத்து 356 பேர், பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 21 ஆயிரத்து 871 பேர், மூன்றாம் பாலினத்தவர் 192 பேர் என மொத்தம் 19 லட்சத்து 77 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர்.இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி , ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை விபரம் :
ஈரோடு கிழக்கு தொகுதி : 226433 வாக்காளர்கள்.
ஈரோடு மேற்கு தொகுதி :301116 வாக்காளர்கள்.
மொடக்குறிச்சி தொகுதி : 228680 வாக்காளர்கள்.
பெருந்துறை தொகுதி : 237854 வாக்காளர்கள்.
பவானி தொகுதி : 242218 வாக்காளர்கள்.
அந்தியூர் தொகுதி : 220922 வாக்காளர்கள்.
கோபிசெட்டிபாளையம் தொகுதி : 256220 வாக்காளர்கள்.
பவானிசாகர் தொகுதி : 263976 வாக்காளர்கள்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு:ஈரோடு மாவட்டத்தில்19.77 லட்சம் வாக்காளர்கள்
Shares: